Sunday 19 December 2021

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள்

அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்வதார்க வந்த பலரில் அவரும் ஒருவர்கள். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்து இருமாதத்தில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்

தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டி போட்டன‌

என்ன சம்பவம்?

அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?

இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர்

இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார்

மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்

இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களை துடைத்துவிட்டு செல்கின்றார் அந்த இஸ்லாமிய கணவன்

மறுநாள் அதே ஊர்வலம்

மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்

அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?

அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன‌

திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்பிணியினை சாகவிடமாட்டேன் என சொல்லி அந்த மருத்துவனையினை தொடங்கினாள்

இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது. 

பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைகு வந்தனர். எந்த மத கட்டுபாடுகளும் அதற்கு தடையாக இல்லை

இந்நாட்டு பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களை காப்பாற்றுவேன் என சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் அவள்.

அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தகால யதார்த்த வாழ்விற்கு எதை செய்ய முடியுமோ அதை செய்தாள்

அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் வாழ்வு.

நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.

அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிக பிரகாசமாக ஒளிகொடுத்துகொண்டிருக்கின்றது

அதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிக தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்

அப்பல்லோ, குளோபல், ராமசந்திரா என பல வந்தாலும் இன்று மிக பெரியதும், மிக மிக தரமான சிகிச்சை கொடுப்பதும் அந்த வேலூரி சிஎம்சி மருத்துவமனையே

அவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள், நம் மக்களின் சாவினை தடுக்க டாக்டராகி திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கின்றாள்

அன்னை தெரசாவிற்கு அவள்தான் வழிகாட்டி

அந்த வணங்கதக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றது

ஜனாதிபதி அதற்குத்தான் வந்திருந்தார்

அந்த வெளிநாட்டு தெய்வத்தை பற்றி ஒருவார்த்தை அவர் சொல்வார் என்றோ, இல்லை இந்த பத்திரிகைகள்தான் அந்த பெண்ணை சொல்லுமா என தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லை

அவளின் மகத்தான தொண்டிற்கு இத்தேசம் கொடுக்கும் அஞ்சலி இதுதானா?

அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான் இருக்கின்றது, நிச்சயம் இந்த நூற்றாண்டு விழாவில் அவள் கல்லறைக்கு அரசு மரியாதை செலுத்தபட்டிருக்க வேண்டும்

இங்கு நாட்டினை சுருட்டி தனக்கு எஸ்டேட் கட்டிய நடிகைக்கு மணிமண்டபம் கட்டுபவர்களுக்கு தியாகத்தின் மகத்துவம் எப்படி தெரியும்?

ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபமாம், எங்கிருந்தோ வந்து இங்கு வந்து உழைத்து இன்றுவரை மக்கள் நலம்பெற பெரும் தொண்டு அற்றியிருக்கும் அவருக்கு ஓன்றுமில்லையாம்

இந்த தேசம் மிக மிக நன்றிகெட்ட தேசமாக சென்றுகொண்டிருக்கின்றது

நன்றி கெட்டவர்கள் செல்லட்டும்

அந்த வேலூர் மருத்துவமனை ஐடா ஸ்கேடரின் கனவு, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்களை அது காப்பாற்றிகொண்டிருக்கின்றது, இன்றுவரை இந்த நொடிவரை எத்தனையோ பேர் நலம்பெற்று கொண்டிருக்கின்றனர்

அந்த பலன் பெற்றவர்கள் நிச்சயம் மனதில் வாழ்த்துவார்கள், அவர் தொண்டையும் அந்த மருத்துவமனை பற்றி அறிந்தவர்களும் இந்த 100ம் நினைவு ஆண்டில் அவளுக்கு மாபெரும் அஞ்சலியினை செலுத்தலாம்

இங்கு வந்தவர்கள் எல்லாம் மதம் பரப்ப வந்தவர் அல்ல, உண்மையிலே இம்மக்களுக்கு ஏதும் செய்ய வாழ்வினை அர்பணித்தவர்கள்

அதில் பென்னி குயிக்கும், ஐடா ஸ்கேடரும் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்

ஆனாலும் ஜனாதிபதி ஒருவார்த்தை அவரை குறிப்பிட்டிருக்கலாம், தமிழ அரசு பிரநிதிகளும் அவள் பெயரை சொல்லவில்லை. அப்படி அவள் இந்நாட்டு மக்களுக்கு என்ன துரோகம் செய்தாள்??

அவள் வெளிநாட்டுகாரியாகவும், கிறிஸ்தவராகவும் இருந்ததுதான் அவளின் தவறு/

இவர்கள் சொல்லித்தான் அவள் புகழ் தெரிய வேண்டுமா? நிச்சயம் இல்லை. தொண்டு என்பதும் சேவை என்பதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது

100 ஆண்டுகளை கடந்து இந்திய மக்களுக்கு பணிசெய்யும் அந்த மருத்துவமனை நிற்கும் வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்

வாழ்வில் நாம் கண்டு கண்ணீர் வீடும் அதிசய கிறிஸ்தவர்களில் அந்த ஐடாவும் ஒருவர். கிறிஸ்தவம் அவர் மனதை அப்படி தொட்டிருகின்றது

அந்த மருத்துவமனை 100 அல்ல, 1000 ஆண்டுகள் இம்மக்களுக்கு தொண்டு செய்யும், காரணம் அதன் அடித்தளம் மிக மிக உன்னதமான மானிட நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கபட்டிருக்கின்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் முதல்வரும் 100ம் ஆண்டில் ஐடா ஸ்கேடரை நினைவு கூறாதது அவளுக்கு பெருமையே,

அந்த கருணையின் தேவதையினை நினைத்து பார்க்காதது இவர்களுத்தான் அவமானம்


பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

இதை கண்டிப்பா நீங்கள் படிக்கவும்

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள்:-
 
மராட்டியத்தில் 1955ல் ஒரு கூட்டத்தை கூட்டுகிறார் பாபாசாகேப். அந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் பாமர மக்கள் கலந்து கொண்டார்கள். படித்த அரசு ஊழியர்களோ அதில் சொற்பமான பேரே கலந்து கொண்டனர். 

#அப்பொழுது அங்கு வந்திருந்த மக்களிடம் நிருபர்கள் கேட்டார்கள்:- 

''எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று. அதற்கு அவர்கள், ''எங்கள் கடவுளை பார்க்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். 

''அம்பேத்கர் கடவுளுன்னா, அவரிடம் என்ன கேட்க வந்திருக்கிறீர்கள்?'' என்றதும், ''நாங்க கடவுளிடம் என்ன கேட்பது? எங்க கடவுளுக்கு தெரியும், எங்களுக்கு என்ன தேவையென்று, அவர் எங்களுக்கு கொடுப்பார்''. 

சிலரோ, ''எங்கள் கடவுள் இனிமேல் எங்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. அடிமையாக இருந்த எங்களுக்கு தன்மானத்தையும், சுயமரியாதையையும் ஏற்படுத்தி தந்தார். அதுவே போதும்'' என்றார்கள்.

அதைப்போல் அங்கு வந்திருந்த அரசு ஊழியர்களிடம், ''நீங்கள் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்?'' என்பதாக கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''10 வருஷமா கிளர்க்காகவே இருக்கேன். புரமோசனே வரலை'',

''ஒரு சின்ன தப்பால சஸ்பெண்ட் ஆயிட்டேன். அதான் அய்யாவை பார்க்க.....''

''அய்யாவின் புண்ணியத்தில் நான் வங்கி மேலாளர். இப்ப என் மகனும் படிச்சிட்டான். அவனுக்கும் வேலை ஏற்பாடு செய்யனும் ஆக படித்த அரசு ஊழியர்கள் தங்களின் நலத்திலும் தங்களின் குடும்ப நலத்தில் மட்டுமே முக்கியம் படுத்தியே பாபாசாகேப் பிடம் கோரிக்கை வைத்தார்கள்....'' 

இப்படியாக தங்கள் சுயநல அஜெண்டாவுடன் வந்திருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த பாபாசாகேப், ''நான் இந்த பாமர மக்களுக்காக எதுவும் செய்யலை. இன்னிக்கும் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலைதான் செய்திட்டிருக்காங்க. அவர்கள் 5   லட்சம் பேர் என்னை   பார்க்க வந்தார்கள். 

#ஆனால் என் 40 வருட போராட்டத்தில், மொத்த லாபமெல்லாம் கிடைச்ச இந்த அரசு ஊழியர்கள் வெறும் 250 பேர்தான், அதுவும் சொந்தநலனுக்காக வந்திருக்காங்க''. யாருக்காக உழைத்தனோ அந்த அரசு ஊழியர்கள் என் முதுகில் குத்திவிட்டார்கள் என்று வேதனையோடு பதிவு செய்தார் பாபாசாகேப் அவர்கள்.!''' 

என் படிப்பின் பலனை அனுபவித்தவர்கள் அனைவரும் படித்தவர்கள். தான் இவர்கள் படித்து முடித்தும் தன் சமுகத்தை வழிநடத்துவார்கள். என்று  நினைத்தேன் இவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.மாறாக அவர்கள் #வயிற்றை நிரப்பிக்கொள்ள தான் என்னை சுற்றி சுற்றி வந்தார்கள். என்று என் கடைசி காலத்தில் உனர்ந்தேன். என்றார் ---பாபாசாகேப்அம்பேத்கர்.

"அன்றும் இன்றும் இதுதான் நடக்கின்றது. #அரசு ஊழியர்கள் தம் சமுகத்திற்க்காக உண்மையாக யாரும்  உழைக்க வில்லை உதவும் வழிநடத்தவும் இல்லை "

ஜெய்பீம்...

விழிப்புணர்வு என்பது. ! ! ! (ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி)

விழிப்புணர்வு என்பது. .

ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி..

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.

நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது.  

- டிராஃபிக் ராமசாமி எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து..
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். பழையதை வைத்து.முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று.

கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.

ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான இந்த பழையதையும் தயிரையும் உண்டால் 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!

என்று பலவிதமான நன்மைகளை பட்டியலிட்டனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும். நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும் பீட்சாவையும் புரோட்டவையும் தேடி அலைவது போல உலகமே பழையச்சோறை தேடி அலைந்தது

HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம் பழையச்சோறை புதிய நவீன உணவு பட்டியலில் சேர்த்தே விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள் சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து வருகிறார்கள். அதுபெரிய தவறு வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழையசோறு.!

சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய பொருளான பழையது தயார்.

இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்.!

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்,...
சலூன் கடைக்கும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நீட் தேர்வு பிரச்னைக்கும் ஒரு வரலாற்றுத்தொடர்பு இருக்கிறது என சொன்னால் யாராவது நம்புவார்களா...?!  நம்பிதான் ஆகவேண்டும். ஏனெனில், அதுதான் உண்மை!

ஆதிகாலத்தில் மருத்துவ தொழில் செய்துவந்த ஓர் இனத்தை , தற்போது முடிதிருத்தும் ஓர் இனமாக மாற்றியவர் யார்..? இந்த சூழலுக்குள் எப்படி அவர்கள் தள்ளப்பட்டார்கள்..? எனும் நெடிய வரலாறை அறிந்தால் இந்த நீட் தேர்வு , எவ்வளவு பெரிய அநீதி எனும் விஷயத்தையும் உள்வாங்கிக்கொள்ளலாம்.

‌#யார் இந்த மருத்துவர்கள்?

ஆதிகாலங்களில் முடிவெட்டுவதற்கென தனி ஆட்களோ குழுக்களோ இருந்திருக்கவில்லை. அவர்கட்குள்ளேயேதான் அதைக் கவனித்து வந்துள்ளனர். தற்போது முடி திருத்துபவர்களாக அறியப்படுகிறவர்கள் அப்போது மருத்துவத் தொழில்களை  பார்த்துவந்துள்ளனர். அதில் சிலர் மருத்துவம் மட்டுமில்லாது அத்துடன் அரசவை விகடகவி, பஞ்சாங்கம் , வானியல் சாஸ்திரங்கள் போன்றவற்றை கணிக்கிற பண்டிதர்கள், பூசாரி முதலான ஐந்து வகை தொழில்களை செய்துவந்துள்ளனர். இதனால் ஐந்துவகை பட்டயங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, 'ஐம்பட்டயர்' எனவும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஐம்பட்டயர் என்கிற சொல்லே பின்னாட்களில் 'அம்பட்டயர்' என மாறியதாக சொல்லப்படுவதுண்டு.

பூசை வேலைகள் செய்கிறவர்களை பட்டர் என அழைக்கும் வழக்கமும் இருந்ததால் ஆதிப்பட்டர்களாக அறியப்பட்ட இவர்கள் வழக்கு திரிந்து அம்பட்டர் என அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்தானது நிலவிவருகிறது. 

அரசவையில் மன்னர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும், மேலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்களாகவும், நாவன்மையுடன் பேசுபவர்கள் எனும் காரணங்களாலும் இவர்களை முறையே பண்டிதர், நாவிதர் எனும் சிறப்பு பெயர்களுடனும் அழைத்தமைக்கான சான்றும் இருக்கிறது.

‌#முடிதிருத்த ஆரம்பித்தது எப்படி?

மருத்துவம் மட்டுமே முதன்மைத்தொழிலாக பார்த்துவந்த இவர்கள் போர்க்காலங்களில் தாக்குண்டு வரும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பார்கள். காது மூக்கு முதலியன கிழிந்து கோரமாக வரும் வீரர்களுக்கு , கைதேர்ந்த இந்த மருத்துவர்களால் அக்காலத்திலேயே அறுவை சிகிச்சைகள் நடந்ததாகவும், அவைதான் இந்தியாவில் நிகழ்ந்த முதல் அறுவை சிகிச்சை எனவும் பல வரலாற்றுத்தகவல்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது மருத்துவமனைகளில் தையல் போடும் செவிலியர்கள் காயம்பட்ட இடத்தில் முடி இருந்தால் அதை நீக்கிவிட்டு தையல் போடுகிறார்கள் இல்லையா... அதுபோல்தான் அக்காலத்தில் சில வீரர்களுக்கு தையல் போடும்போது, காயம்பட்ட இடத்திலுள்ள முடிகளையும் நீக்கி தையல்போட்டுள்ளனர். ஆக, இப்படியாகத்தான் முதன்முதலில் அவர்களின் கைகளில் அந்த கத்தி புகுத்தப்படுகிறது. ஆனாலும் அப்போதுவரைக்கும் எந்த பெரிய சிக்கலும் அவர்களுக்கு இருந்திருக்கவேயில்லை.

‌#ஆதிக்க சாதிகளின் சூழ்ச்சி

அதற்குப்பின்னே சைவ , வைணவ மதங்கள் சமண மற்றும் புத்த மதங்களை அழித்துக்கட்டி பார்ப்பனீயம் தலைவிரித்து ஆட ஆரம்பித்த காலத்தில்தான் மருத்துவர்களுக்கு இந்த பிரச்னை தொடங்குகிறது.

மற்றவர்களிடமிருந்து தாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அறியப்படவேண்டும் என இப்போது போலவே அப்போதும் கருதிய சில  பார்ப்பனர்கள், தலையின் முன்பகுதி முடியை மழித்துக்கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போதைய அதிகாரமானது பார்ப்பனர் கையிலே இருந்ததாலும், பார்ப்பனர்களுக்கு தலை மழிப்பது இறைவனுக்கு செய்கிற தொண்டு என நம்பவைக்கப்பட்டதாலும் வேறுவழியின்றி மருத்துவர்களும் பார்ப்பனர்களுக்கு முன்தலை முடியை மட்டும்  மழித்து வந்துள்ளார்கள்.

இப்படியாக முடிவெட்ட துவங்கிய மருத்துவர்களின் வீழ்ச்சி பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினர் சூழ்ச்சியால் அதன்பின்னர் ரொம்பவே மோசமான நிலைக்கு சென்றது.

நோய், பிணி நீக்க பகவானுக்கு பரிகாரங்களை செய்கிறோம் எனவும் தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் எனவும் சொல்லி பணம்பறித்து வந்த அக்கும்பலுக்கு எளிய முறையில் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்த ஆதிமருத்துவர்கள் பெரிய இடையூறாக இருந்தனர்.

இதை எப்படி கையாள்வது என யோசித்த பார்ப்பனீயம் மருத்துவ தொழிலை அவர்களிடமிருந்து பிரிக்க திட்டம் தீட்டியது. அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம் தீண்டாமை . அந்த தீண்டாமையை வலுவாக்க, இந்த ஆதிமருத்துவர்கள், முடி மட்டுமே வெட்டவேண்டும் எனக்கூறியதுடன் அவர்கள் முடிவெட்டவே ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் என பரப்புரை செய்தது.

தொடர்ந்து அவமதிப்பது, புறக்கணிப்பது, தம்மையே அண்டிப் பிழைக்குமாறு மற்றவரின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குவது தீண்டாமையை நியாயப்படுத்தும் ஒரு தத்துவ விளக்கத்தை உருவாக்கி பரப்புரை செய்வது போன்ற வழிமுறைகளில்தான் சாதிய அடுக்குகள் இங்கே வேரூன்றியது. மேலும்  அறிவுசார் தொழில்களை லாவகமாக ஆதிக்க சாதிகள் கையகப்படுத்துவதும் அக்காலங்களில் தொடர்ந்துகொண்டிருந்தது. இவை இந்த
மருத்துவ சமூகத்தையும் விட்டுவைக்கவில்லை.

பார்ப்பனர்களின் முன்தலை முடியை  மழிக்க பணிக்கப்பட்டு, பிறகு பிணங்களுக்கும் சவரம் செய்யும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கால்களைக் கழுவிவிடுவது, ஈமக்காரியங்கள் செய்வது மாதிரியான தமது வக்கிரங்களை நிறைவேற்றித்தரும் இழிநிலைக்கு மருத்துவர்களை ஆட்படுத்திவிட்டு பின் அதே காரணங்களைச் சொல்லி அவர்களை தீண்டத்தகாதாராக்கினர். (இன்னும் மோசமான சில வேலைகளை செய்யவும் பணிக்கப்பட்டனர். ஒவ்வாமை கருதி அவை இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது) பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்கசாதியினர் நகரங்களுக்கு பெயர்ந்து போய்விட்ட நிலையில் கிராமத்திலுள்ள இடைநிலைச் சாதிகள் அந்த ஒடுக்குமுறைகளை கையாள ஆரம்பித்தனர்.

உழைப்புக்கு ஊதியமாக ஊர்ச்சோறு எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை உருவாக்கியதன் மூலம் மருத்துவர்கள் தன் அடுத்தவேளை கஞ்சிக்கு ஆதிக்கசாதியினரையே அண்டி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும்  ஊரில் ஆதிக்க சாதிக்கு சவரம் செய்பவர்கள் தலித்களுக்கு சவரம் செய்யக்கூடாது எனவும் பணிக்கப்பட்டனர். மேலும் தலித்துகளுக்கு சவரம் செய்ய தனியாக ஆட்களை நியமித்தனர்.  தலித்துகளுக்கு சவரம் செய்கிற பிரிவினரை சாதி அடுக்கில் மருத்துவர்களைவிட கீழான நிலையில் வைத்தனர்.

(இதுபோன்று ஒவ்வொரு சாதிக்கு கீழேயும் ஒரு சாதியை வைத்து கட்டமைக்கப்பட்ட நூதன சாதிய கட்டமைப்புகளால்தான், தனக்கு கீழேயும் ஒரு சாதி இருக்கிறது எனும் வெற்று பெருமிதத்தில் சாதியம் இங்கே வெற்றிகரமாக இன்னமும் அழியாது இயங்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறைகளும் நிகழ்கிறது)

மருத்துவ சமூகத்தினரின் பரம்பரை மருத்துவ அறிவை ஒழித்துக்கட்டும் ஆதிக்கசாதி வெறிக்கு பிரிட்டிஷ் காலனியாட்சி புகுத்திய அலோபதி மருத்துவமுறையும் உதவியது. அலோபதியை கைக்கொண்ட ஆதிக்கசாதியினர், பாரம்பரிய மருத்துவ அறிவையே இழிவானதாக சித்தரித்தனர். இதன்வழியாக பாரம்பரியமாக செய்து வந்த மருத்துவ வேலையை அவர்களால் தொடர முடியவில்லை. வேறு  வழியின்றி ஆதிக்கசாதியினரின் வீடுகளுக்குப் போய் அல்லது ஆற்றங்கரைகளில் காத்துக் கிடந்து தொழில் செய்துவந்த அவர்கள் பின்னாட்களில் காலனியாட்சியைப் பயன்படுத்தி தற்போதிருக்கிற சலூன்களை தொடங்கினர். இப்படியாக தொடங்கியதுதான் இந்த தொழில் .

ஆதிமருத்துவர்களிடமிருந்து சூழ்ச்சிகளால் மருத்துவ அறிவு பிடுங்கப்பட்டு எப்படி வேறு வேலைக்கு பணிக்கப்பட்டார்களோ அதைப்போலவே பணம் கொழிக்கும் தற்போதைய மருத்துவ தொழிலை குறிப்பிட்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனும் நோக்கத்திலே செய்யப்படும் சூழ்ச்சிகளே இந்த நீட் தேர்வு மாதிரியான விஷயங்கள். 

ஆகவே இவைபோன்ற மற்றோர் வரலாற்றுத் துரோகமானது நிகழாதபடி இவ்விஷயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டியது முக்கியம்

மனைவிக்கு உள்ள சிறப்புகள்

💚மனைவி என்றால் அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்💚

💚பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்💚

💚ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்💚

💚பெண் என்கிற  கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்💚

💚கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்💚

💚அன்பாகப் பேசுங்கள்
சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பகிர்ந்து கொள்ளுங்கள்💚

💚மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து  கொள்ளுங்கள்💚

💚உங்கள் மகளை
கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் 
கவனித்து கொள்ளுங்கள்💚

💚உடல் மனசு இரண்டையும்
மென்மை படுத்துங்கள்💚

💚சமையலை பாராட்டுங்கள்
அவள் சமையல் அறையில்
பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின் சின்னம்.💚

💚அவள் செய்வது சமையல்
அல்ல. அன்பின் அழகு.
தினசரி நன்றி சொல்லுங்கள்.
குறுந்தகவல்களை மனைவிக்கும்
அனுப்பலாமே💚

💚அவள் குடும்பத்திற்காக
எரியும் இன்னொரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூட வரும்
அன்பு தேவதை💚

💚கடவுள் நம்முடன்
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள் கொடுத்த வரம்
அன்னையும் மனைவியும்💚

💚அவள் கண்களில் கண்ணீர்
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம்
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

ரொம்ப முக்கியமா  இந்த மெசேஜ் ஐ உங்கள் அனணத்து குரூப்க்கு உடனே அனுப்புங்கள்.

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

 மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇
 மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

அப்போது தான் கோவம், EGO, இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

வாய்ப்புகளை கொடுத்தும், வாய்ப்புகளில் சரியானதை தேர்ந்தெடுத்தும்  வாழ கற்றுக் கொள்ள வேண்டும்👍👍👍👍

படித்ததில் பிடித்ததாய் பகிர்கின்றேன்

சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்

சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்

அந்த காலம் தான்
நன்றாக இருந்தது....!
******

ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*******

பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*******

மிதி வண்டி வைத்திருந்தோம்.,
*********

எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
********

ரஜினி, கமல் படம் ரிலிஸ்.
KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
*****

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
********

கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*******

கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
********

குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
********

வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*******

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**********

தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்
*******

புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
*****

டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******

வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
********

எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******

சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******

மழை நின்று
நிதானமாக பொழியும்
*******

தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
*********

வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
*********

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*******

வெஸ்ட் இன்டீசை
 வெல்லவே முடியாது.,
*********

சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******

அம்மா பக்கத்தில் உறங்கினோம்
*********

கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********

முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
-------------------

பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………,
சிலிண்டர் மூடுதுணி போல்
 யாரும் நைட்டி அணிய வில்லை.,
******

சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********

தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
 நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******

டாக்டர் வீட்டுக்கே வருவார்
********

காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது
*******

சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்
*******

மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
******

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*******

மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
******

ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
******

மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******

தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
*********

படித்ததில் மனதை உருக வைத்தது....

உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை

குட்டி கதை
____
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.

அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு..
அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...

காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர்
அந்த செல்வந்தரைப் பார்த்து...

ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்

சில ஆண்டுகள் கடந்தன...

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.

 அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.

அப்போது நல்ல மழை.⛈

பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.

அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]___________

ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது

வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)

நீதியும் ஓர் நாள் தூக்கிலிடப்படும்

நீதியும் ஓர் நாள் தூக்கிலிடப்படும்

தன் மானச் சிங்கங்கள்
ஆண்டான் அடிமை
அழித்தனர்
இனம் மானம் காத்தனர்

பொறுக்க முடியாது
குலக்கல்வியை - நம்
குலம் நசுக்க
கொண்டு வந்தார்
C. ராசகோபலாச்சாரியார்
குடியானவன் மகன்
படித்து விடலாமா?
பட்டம் பெற்று விடலாம?
என்று

தலைவர்கள்
துயர் துடைக்க
துள்ளி எழுந்தனர்
உயிர் துச்சமென
சமூக நீதி காத்திட
வெடித்தது பேராட்டம்
தமிழகமெங்கும்
தலைவர்கள்
சிறை புகுந்தனர்
அடி பணிந்தார்
ஆச்சாரியார்
குலக்கல்வி
விலக்கிக் கொள்ளப்பட்டது

பாவிகள் விடுவார்களா?
படிக்க விட்டால் தானே
படிப்பாய் நீ
தினிக்கப்பட்டது
கட்டாய இந்தி
"இந்திப் பெண்னே கேள்-நீ
நாடி வந்த கோழை நாடல்ல இது"
தலைவர்கள் ஆன் , பெண்
பேதமின்றி அணிவகுத்தனர்
கட்டாய இந்தியை எதிர்த்து

கட்டவிழ்த்து விடப்பட்டது
காட்டுமிராண்டி தர்பார்
அடக்கு முறை, தடியடி
துப்பாக்கிச் சூடு, சிறைவாசம்
அச்சுறுத்தியது
அடங்குவானா தமிழன்
அடலோறு என்று
ஆர்த்தெழுந்தான்
தமிழன் - தன்
இன்னுயிர் நீத்தனர்
சிறையிலடைக்கப்பட்டார்கள்
தலைவர்கள்.
அடங்கா போரட்டத்தால்
கட்டிப்போடப்பட்டாள்
இந்தி அரக்கி

நீருபூத்த நெருப்பாய்
இந்து மதப் போர்வையில்
கணன்று கொண்டிருந்த _ ஆரியம்
தமிழன் தலை நிமிர்வதா?
எங்கும் தமிழா
எதிலும் தமிழனா
கூடாது கூடாது
வெறுப்பை உமிழ
கூறுகெட்ட மதியாளர்
துணை கொண்டு
" நீட்டை " நீட்டியுள்ளனர்

5, 6, மைல் நடந்து
கால் வயிறுண்டு
தெருவிளக்கில் படித்து
நன்கு தேர்வு பெற்ற
ஏழை மானவன்
3000 கி.மீ. கடந்து
3 நாள் பயணம் செய்து
"நிட்டை " நீட்டாக - எப்படி
எழுத இயலும்

சிந்தித்தார்களா
சிறு மதி கொண்டோர்
இனத்தை இல்லாது
செய்திடல் வேண்டும்
இது தானே
அதுகளின்
நோக்கம
முலைத்தால் தானே
மரமா வாய்
முலையிலேயே
கிள்ளி விட்டால் - இக்
கொடூரத்தை
நீதி கொண்டு
தடை செய்யலாம் என்று

நீதியின் கதவை தட்டினால்
திறக்குமா கதவு
வழக்காடுபவன்தான்
வாய்தாவுக்கு வாய்தா கேட்பான்
நீதியும் விலக்கல்ல
என்கிறது நடப்பு

இந்த ஒர் ஆண்டாம்
அடுத்த ஆண்டு சங்கடம்
சரி செய்யுமாம்.
உயிர்போகிறது தண்ணீர்
வேண்டும் என்றால் - உயிர்
போன பின்-நீர்
ஊற்றுவது தான்   நீதி நீதி நீதி
"ஆட்டி வைப்பார் ஆட்டி வைத்தால்
ஆடாதோர் யார் கண்ணா"

கால தாமதம் செய்யும் நீதி
மறுக்கப்படும் நீதிக்கு சமம்
தெரிந்தும், புரிந்தும்
தவறை மீண்டும் மீண்டும் - நீதி
செய்யுமேயானால்

நீதியும் ஒர் நாள்
தூக்கிலிடப்படும்

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்க...