Sunday 19 December 2021

நீதியும் ஓர் நாள் தூக்கிலிடப்படும்

நீதியும் ஓர் நாள் தூக்கிலிடப்படும்

தன் மானச் சிங்கங்கள்
ஆண்டான் அடிமை
அழித்தனர்
இனம் மானம் காத்தனர்

பொறுக்க முடியாது
குலக்கல்வியை - நம்
குலம் நசுக்க
கொண்டு வந்தார்
C. ராசகோபலாச்சாரியார்
குடியானவன் மகன்
படித்து விடலாமா?
பட்டம் பெற்று விடலாம?
என்று

தலைவர்கள்
துயர் துடைக்க
துள்ளி எழுந்தனர்
உயிர் துச்சமென
சமூக நீதி காத்திட
வெடித்தது பேராட்டம்
தமிழகமெங்கும்
தலைவர்கள்
சிறை புகுந்தனர்
அடி பணிந்தார்
ஆச்சாரியார்
குலக்கல்வி
விலக்கிக் கொள்ளப்பட்டது

பாவிகள் விடுவார்களா?
படிக்க விட்டால் தானே
படிப்பாய் நீ
தினிக்கப்பட்டது
கட்டாய இந்தி
"இந்திப் பெண்னே கேள்-நீ
நாடி வந்த கோழை நாடல்ல இது"
தலைவர்கள் ஆன் , பெண்
பேதமின்றி அணிவகுத்தனர்
கட்டாய இந்தியை எதிர்த்து

கட்டவிழ்த்து விடப்பட்டது
காட்டுமிராண்டி தர்பார்
அடக்கு முறை, தடியடி
துப்பாக்கிச் சூடு, சிறைவாசம்
அச்சுறுத்தியது
அடங்குவானா தமிழன்
அடலோறு என்று
ஆர்த்தெழுந்தான்
தமிழன் - தன்
இன்னுயிர் நீத்தனர்
சிறையிலடைக்கப்பட்டார்கள்
தலைவர்கள்.
அடங்கா போரட்டத்தால்
கட்டிப்போடப்பட்டாள்
இந்தி அரக்கி

நீருபூத்த நெருப்பாய்
இந்து மதப் போர்வையில்
கணன்று கொண்டிருந்த _ ஆரியம்
தமிழன் தலை நிமிர்வதா?
எங்கும் தமிழா
எதிலும் தமிழனா
கூடாது கூடாது
வெறுப்பை உமிழ
கூறுகெட்ட மதியாளர்
துணை கொண்டு
" நீட்டை " நீட்டியுள்ளனர்

5, 6, மைல் நடந்து
கால் வயிறுண்டு
தெருவிளக்கில் படித்து
நன்கு தேர்வு பெற்ற
ஏழை மானவன்
3000 கி.மீ. கடந்து
3 நாள் பயணம் செய்து
"நிட்டை " நீட்டாக - எப்படி
எழுத இயலும்

சிந்தித்தார்களா
சிறு மதி கொண்டோர்
இனத்தை இல்லாது
செய்திடல் வேண்டும்
இது தானே
அதுகளின்
நோக்கம
முலைத்தால் தானே
மரமா வாய்
முலையிலேயே
கிள்ளி விட்டால் - இக்
கொடூரத்தை
நீதி கொண்டு
தடை செய்யலாம் என்று

நீதியின் கதவை தட்டினால்
திறக்குமா கதவு
வழக்காடுபவன்தான்
வாய்தாவுக்கு வாய்தா கேட்பான்
நீதியும் விலக்கல்ல
என்கிறது நடப்பு

இந்த ஒர் ஆண்டாம்
அடுத்த ஆண்டு சங்கடம்
சரி செய்யுமாம்.
உயிர்போகிறது தண்ணீர்
வேண்டும் என்றால் - உயிர்
போன பின்-நீர்
ஊற்றுவது தான்   நீதி நீதி நீதி
"ஆட்டி வைப்பார் ஆட்டி வைத்தால்
ஆடாதோர் யார் கண்ணா"

கால தாமதம் செய்யும் நீதி
மறுக்கப்படும் நீதிக்கு சமம்
தெரிந்தும், புரிந்தும்
தவறை மீண்டும் மீண்டும் - நீதி
செய்யுமேயானால்

நீதியும் ஒர் நாள்
தூக்கிலிடப்படும்

No comments:

Post a Comment

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்க...